Skip to main content

Temple currently under construction. Help us build the Moolasthanam and Kodimaram. Support the renovation

Yorkshire Sivan TempleYorkshire Sivan Trust · Charity 1218845

About us

About Yorkshire Sivan Temple

Yorkshire Sivan Temple is the working name of the Yorkshire Sivan Trust (YST), registered charity number 1218845.

Our history

The Yorkshire Sivan Trust grew out of the Yorkshire Hindu community, which represents more than 400 Hindu families living across the region. For many years the community has come together for Thai Pongal, Deepavali, Saraswati Pooja and other celebrations, each attracting between 100 and 300 people.

As the community grew, so did the need for a permanent temple. A group of Yorkshire-based devotees and community organisers founded the Trust in 2025, and more than 50 families pledged money or time before the charity was even registered.

The temple is based at 33A Edenhall Road, Sheffield, in premises formerly known as the Arbourthorne Centre, now renamed the Yorkshire Sivan Temple (officially, the Sri Viswanathar Visalakshi Amman Temple).

The temple is currently being renovated and developed as a traditional Hindu temple dedicated to Sri Viswanathar and Visalakshi Amman. The ongoing works include the construction of a traditional gopuram (entrance tower), moolasthanam (sanctum sanctorum), and kodimaram (flagstaff).

எமது வரலாறு

ஆலயத்தின் தோற்றமும் அடிப்படை நோக்கமும்

“அவன் இன்றி அணுவும் அசையாது” என்ற இறைநம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு, பரம்பொருளான சிவபெருமானின் திருவருளுடனும், அவர் மீது ஆழ்ந்த அன்பும் அசைக்க முடியாத பக்தியும் கொண்ட அடியார்களின் ஒன்றுபட்ட விடாமுயற்சி மற்றும் தன்னலமற்ற சேவையினாலும் யோக்‌ஷியர் சிவன் கோவில் உருவெடுத்துள்ளது.

இங்கிலாந்தின் வடபகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க யோக்‌ஷியர் பிரதேசத்தின் ஷெஃபீல்ட் (Sheffield) பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி, எமது சைவ சமயம், தமிழ் ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் ஆன்மீக மையமாகவும் திகழ வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

காலப்போக்கில் எமது தமிழ் மொழி, சைவ சமய நெறிகள், ஆன்மீக விழுமியங்கள் மற்றும் பாரம்பரியக் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாத்து, அவற்றை எமது எதிர்காலச் சந்ததியினரிடம் கொண்டு சேர்ப்பதும் இவ்வாலயத்தின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், இப்பிரதேசத்தில் வாழும் மக்களிடையே சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பர அன்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்த்துப் பேணுவதும் இவ்வாலயத்தின் உயரிய நோக்கங்களுள் ஒன்றாகும்.

ஆலய உருவாக்க வரலாறு

யோக்‌ஷியர் பிரதேசத்தில் சிவாலயம் ஒன்று உருவாக வேண்டும் என்பதற்காகப் பலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதிலும், அதற்கான ஆக்கபூர்வமான முதல் முயற்சியை மேற்கொண்டு வித்திட்டவர், இப்பிரதேசத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் திரு. நந்தகுமார் விசுவலிங்கம் ஆவார். அவருக்கு உறுதுணையாகச் செயல்பட்டவர்கள் யோக்‌ஷியர் பிரதேசத்தைச் சேர்ந்த திரு. சயித்குமார் முத்தையா, திரு. வேலாயுதர் விஜயரூபன், திரு. விக்னேஸ்வரன் ராயரத்தினம் ஆகியோராவர்.

இவர்களுடன் இணைந்து, இப்பிரதேசத்தில் ஒரு சிவன் கோவில் அமைய வேண்டும் என்ற எண்ணத்தை முன்மொழிந்து ஆதரவளித்தவர்களில் திரு. வோல்ட்டன் பெர்னாண்டோ, திரு. அந்தோணி சூசைபிள்ளை, திரு. றதீஸ் செல்வநாயகம் மற்றும் திரு. செல்வரத்தினம் ஜெயரூபன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இறைவன் மீது கொண்ட பக்தியாலும், இப்பிரதேசத்தில் ஒரு சிவாலயம் அமைய வேண்டும் என்ற ஆழ்ந்த ஆன்மீக எண்ணத்தாலும், தங்களது அயராத முயற்சியினாலும் இவர்கள் இப்புனிதப் பணிக்கான ஆரம்ப அடித்தளத்தை அமைத்தனர்.

ஆலயத்திற்கான இடமும் நிறுவனர் பங்களிப்பும்

2025-ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில், திரு. நந்தகுமார் விசுவலிங்கம் தனது சொந்தச் செலவில் கொள்வனவு செய்திருந்த நிலத்தை, பொதுமக்கள் வழிபடக்கூடிய பொதுச் சிவாலயம் ஒன்றை அமைப்பதற்காகத் தன்னலமின்றி வழங்கினார். அதுமட்டுமன்றி, அங்கிருந்த கட்டிடத்தின் திருத்தப் பணிகளையும் தனது சொந்தப் பொறுப்பில் மேற்கொண்டார்.

அவரது இந்த அர்ப்பணிப்பும் தன்னலமற்ற சேவையும் யோக்‌ஷியர் சிவன் கோவில் உருவாகிய வரலாற்றின் முக்கியமான முதற்படியாக அமைந்தது. எனவே, ஆலய உருவாக்கத்திற்கான முதற்கருத்தை விதைத்து, அதற்கான இடத்தையும் வழங்கி, ஆரம்பகட்டப் பணிகளை முன்னெடுத்த நிறுவனர் (Founder) என்ற வகையில் அவரது பங்களிப்பு, யோக்‌ஷியர் சிவன் கோவில் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்க ஒன்றாகும்.

யோக்‌ஷியர் சிவன் நற்பணி மன்றத்தின் தோற்றம்

“அனைவரின் பங்களிப்பும் – சிவனுக்கே” என்ற உயரிய உணர்வுடன் ஆலயத் திருப்பணியை முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, திரு. சயித்குமார், திரு. விஜயரூபன், திரு. விக்னேஸ்வரன் மற்றும் திரு. நந்தகுமார் ஆகியோர் இணைந்து யோக்‌ஷியர் சிவன் நற்பணி மன்றத்தை (Yorkshire Sivan Trust) ஆரம்பித்தனர். அதன் ஆரம்பகால நிர்வாகத்தில், திரு. நந்தகுமாரைத் தவிர்த்து ஏனைய மூவரும் அறங்காவலர்களாகப் (Trustees) பொறுப்பேற்றனர். இதனூடாக ஆலயத்தின் திருப்பணிகள் சமூகத்தின் ஒன்றுபட்ட பங்களிப்புடன் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படத் தொடங்கின.

அடியார்களின் ஒன்றுபட்ட பங்களிப்பு

யோக்‌ஷியர் வாழ் மக்களின் பொருளாதார உதவி மட்டுமன்றி, கட்டுமானப் பொருட்கள், கட்டுமானப் பணிகளுக்கான உதவிகள், உடலுழைப்பு, திருவுருவச் சிலைகள் மற்றும் பல்வேறு வகையான சேவைகள் மூலமாகவும் அடியார்கள் தங்களது பங்களிப்பை வழங்கினர். ஒவ்வொரு சிறிய பங்களிப்பும் சிவபெருமானுக்குச் செய்யப்படும் பெரும் கைங்கரியமாகக் கருதப்பட்டு, பக்தியுடனும் ஒற்றுமையுடனும் ஆலயத் திருப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அடிக்கல் நாட்டும் திருப்பணி ஆரம்பம்

அனைவரின் ஒன்றுபட்ட முயற்சியும் அசைக்க முடியாத இறைநம்பிக்கையும் ஒன்றிணைந்ததன் பலனாக, 2026-ஆம் ஆண்டு பங்குனி உத்திர நன்னாளான 01 ஏப்ரல் 2026 அன்று, யோக்‌ஷியர் சிவன் கோவில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும் சங்கு பூசை மிகவும் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

அந்நன்னாளில் நடைபெற்ற இப்புனித நிகழ்வு, யோக்‌ஷியர் சிவன் கோவில் வரலாற்றில் முக்கியமானதொரு திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் ஆலயத்தின் திருப்பணிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிவபெருமானின் திருவருளையும் அடியார்களின் முழுமையான ஆதரவையும் துணையாகக் கொண்டு ஆலயத் திருப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

அடியார்களின் அர்ப்பணிப்பு

இந்த மாபெரும் திருப்பணியில் பங்குகொண்ட ஒவ்வொரு அடியாரும் தங்களால் இயன்ற வகையில் தமது பங்களிப்பை வழங்கினர்.

  • நிதியுதவி: பலர் தாராளமாக நிதியுதவி வழங்கினர்.
  • பொருளுதவி: சிலர் கட்டுமானப் பொருட்களையும், மற்றும் சிலர் திருவுருவச் சிலைகளையும் அர்ப்பணித்தனர்.
  • சேவையுதவி: சிலர் கட்டுமானப் பணிகளுக்கான உதவிகளைச் செய்ததோடு, பலர் தங்களது உடலுழைப்பையும் பொன்னான நேரத்தையும் தன்னலமின்றி வழங்கினர்.

இவ்வாறு ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒன்றிணைந்து, ஒரு மனிதரின் கனவாகத் தொடங்கிய முயற்சி, ஒரு சமூகத்தின் ஒன்றுபட்ட திருப்பணியாக வளர்ச்சியடைந்தது. இவ்வாலயத்தின் உருவாக்கத்தில் பங்களித்த ஒவ்வொருவரின் உழைப்பும், ஒவ்வொரு குடும்பத்தின் ஆதரவும், ஒவ்வொரு அடியாரின் பக்தியும் அர்ப்பணிப்பும் என்றும் மறக்க முடியாதவை.

எமது அடையாளம்

யோக்‌ஷியர் சிவன் கோவில் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல;

  • இது எமது ஆன்மீகத்தின் அடையாளம்.
  • இது எமது சைவ சமயத்தின் அடையாளம்.
  • இது எமது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் அடையாளம்.
  • இது எமது பாரம்பரியத்தின் அடையாளம்.
  • இது எமது சமூக ஒற்றுமையின் அடையாளம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இது எமது அடுத்த தலைமுறைக்காக நாம் உருவாக்கும் ஆன்மீகப் பொக்கிஷம்.

வெளிநாட்டில் வாழும் எமது தமிழ் சமூகத்தினருக்குத் தாயகத்தின் ஆன்மீக மணத்தையும் சைவ சமயப் பாரம்பரியத்தையும் உணர்த்தும் புனிதத் தலமாக இவ்வாலயம் விளங்க வேண்டும் என்பதே அனைவரின் பேரவாவாகும். இவ்வாலயத்தில் இறைவழிபாடு மட்டுமன்றி, சைவ சமயப் பண்பாடுகள், தமிழ் மொழி மற்றும் மரபுகள், ஆன்மீக விழுமியங்கள், அறப்பணிகள் மற்றும் சமூகப் பணிகள் ஆகியவை தலைமுறை தலைமுறையாகத் தொடர வேண்டும் என்பதும் இவ்வாலயத்தை உருவாக்கிய அடியார்களின் உயரிய நோக்கமாகும்.

எதிர்காலத் தலைமுறைக்கான பொக்கிஷம்

இன்று நாம் உருவாக்கியுள்ள இவ்வாலயம் எமது தலைமுறைக்காக மட்டும் அல்ல; எமது பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும், இனிவரும் தலைமுறைகள் அனைத்திற்கும் நாம் விட்டுச் செல்லும் ஆன்மீகப் பொக்கிஷமாக இது திகழ வேண்டும்.

சிவபெருமானின் திருவருளால் இவ்வாலயம் என்றும் செழித்து வளர்ந்து, சைவ நெறியையும் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தையும் தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லும் ஆன்மீக மையமாகத் திகழட்டும்.

இவ்வாலயத்தில் ஒலிக்கும் ஒவ்வொரு “ஓம் நமசிவாய” என்னும் திருநாமமும், இவ்வாலயத்தை உருவாக்கிட உழைத்த ஒவ்வொரு அடியாரின் பக்திக்கும் அர்ப்பணிப்பிற்கும் நிலையான சாட்சியாக என்றும் விளங்கட்டும்.

இவ்வாலயத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தங்களது நிதி, பொருள், உடலுழைப்பு, நேரம், சேவை மற்றும் பிரார்த்தனை ஆகியவற்றின் மூலம் பங்களித்த அனைவரின் அர்ப்பணிப்பும் என்றும் நன்றியுடன் நினைவுகூரப்படட்டும். அவர்களது பெயர்களும் பங்களிப்புகளும் ஆலயத்தில் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு, எதிர்காலத் தலைமுறைகளும் அறிந்துகொள்ளும் வகையில் பாதுகாக்கப்படட்டும்.

அனைவரையும் ஒருங்கிணைந்து இப்புனிதப் பணியை நிறைவேற்ற அருள்புரிந்த சிவபெருமானின் திருவருள் என்றும் இவ்வாலயத்தின் மீதும், இதற்காக உழைத்த அடியார்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீதும் நிலைத்திருக்கட்டும்.

சிவபெருமானின் திருவருளால், யோக்‌ஷியர் சிவன் கோவில் தலைமுறை தலைமுறையாகத் தழைத்தோங்கட்டும்.

“ஓம் நமசிவாய”

Our mission

“To advance Hindu traditions in Yorkshire for the benefit of the public through worship, religious observance, festivals, teaching, cultural activities and community engagement.”

In practice, this means:

  • daily pooja, meditation and other religious observances in accordance with Hindu traditions
  • public celebrations of religious festivals and observances
  • teaching about Hindu beliefs, scriptures and practice, including yoga as a spiritual discipline
  • outreach, cultural events and educational programmes as expressions of Hindu traditions

Our vision

“To establish and sustain a Temple in Yorkshire that advances Hindu traditions for the benefit of the public.”

Our aims for the first year

  • Establish regular daily pooja, meditation and religious observances with open public access.
  • Deliver a programme of festivals, teaching sessions and community activities.
  • Build a committed volunteer team for worship, teaching, administration and festivals.

Our aims for the next two to five years

  • Grow the temple into a recognised centre for Hindu traditions in Yorkshire.
  • Expand teaching, festival and educational activities that increase public understanding.
  • Build long-term financial and organisational stability.

Our values

Faithfulness to Hindu traditions
Preserving, sustaining and advancing Hindu traditions through worship, teaching, festivals and community activities.
Seva (selfless service)
Encouraging selfless service in running the temple, as an expression of faith and devotion.
Public access and welcome
Making the temple accessible to the Hindu community in Yorkshire, while welcoming everyone who wishes to attend or learn.
Teaching and understanding
Clear teaching about Hindu beliefs and practices, including the religious significance of yoga and meditation.
Integrity and good governance
Acting with honesty, transparency and accountability, and using every resource solely for our charitable objects.

Our charitable objects

The objects of the Yorkshire Sivan Trust are to advance Hindu traditions in Yorkshire for the benefit of the public. In furtherance of these objects, the charity establishes and maintains a temple as a place of public worship and as a centre for its activities.